பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள வாஸ்து..!!

அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்போம். அதேபோல் வீட்டு அமைப்பும் நமது உடல் அமைப்பும் இரண்டுமே ஒன்று தான்.

இங்கு நமது உடல், நமது இருப்பிடம், இந்த அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைத்த திகழ்கிறது.

பஞ்சபூதங்கள் தன்மைகள்

நீர் :

குடியிருப்பு, விவசாய நிலம், தொழிற்சாலை இவைகளில் நீர்நிலைகள் அமைத்தால் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு இந்த பகுதியில் மட்டுமே வாழவேண்டும்

1.பூமி கீழ் தண்ணிர் தொட்டி அமைப்பு

2.சம்பு

3.போர்வெல்

4.கிணறு

5.சிறு வாய்க்கால் அல்லது ஓடை வடகிழக்கு பகுதியில் வருவது சிறப்பு

மற்ற பகுதிகளில் நீர் நிலைகள் வரும் பட்சத்தில் அந்த கெடுதலான பலன்களே நடைபெறும்.

நெருப்பு :

நாம் வசிக்கும் வீட்டியின் மொத்த அமைப்பிற்கு தென்கிழக்கில் மட்டுமே சமையல் அறை வைத்து கொள்ளலாம். தேவை கருதி வடமேற்கு பகுதியில் சமையல் அறை வைத்து கொள்ளலாம் , மற்ற எந்த பகுதியிலும் சமையல் அறை வருவதை தவிர்ப்பது நல்லது.அப்படி வரும் போது தவறான மிகக் கெடுதலான பலன்களே அந்த வீட்டில் ஏற்படுகிறது .

மண் :

மொத்த வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதி மண் தன்மைக்கு உரியது.

இந்த பகுதியை தமிழகத்தில் பல ஊர்களில் பல பெயரில் அழைக்கிறார் அதாவது குபேர மூலை , கன்னி மூலை , பழனி மூலை, நைருதி மூலை, நிருதி மூலை,என அழைக்கிறார்கள். நாம் விதைகளை போடும் போது மண்ணில் தான் போடுவோம் அப்போது தான் அது முளைத்து விருட்சியாகும்.

வாயு (காற்று) :

வடமேற்கு பகுதியை வாயு மூலை என்று கூறுகிறோம். நாம் வசிக்கும் வீட்டில் செப்டிக்டேங் இந்த பகுதியில் தான் அமைக்க வேண்டும். காரணம் அதில் உற்பத்தி கூட கூடிய வாயு காற்றில் கறைந்து மனிதனுக்கு எந்த வித கெடுதலும் ஏற்பட கூடாது என்பதற்காக.

வடமேற்கு ஒரு பகுதியை தவிர வேறு பகுதியில் கழிவறை குழி அமைப்பதால் பல கெடுதலான விளைவுகள் ஏற்படுகிறது.

ஆகாயம் :

ஆகயமானது நமது வீட்டில் தரைக்கும், முதல் தளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில் உள்ள வெற்றிட அமைப்பே நமக்கு ஆகாயமாக திகழ்கிறது .நமது வீட்டின் உள் அமைப்பில் High Celling அமைப்பு வரும் பட்சத்தில் இந்த ஆகாயம் என்கிற பூதமானது அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது கடுமையான கெடுதல் பலனை ஏற்படுகிறது .

மனித உடலமைப்பு :

இந்த பஞ்சபூதங்காலனது மனித உடலில் மூச்சு காற்றாகவும், வெப்பம் உயிர் துடிப்பாகவும், நீர் இரத்தமாகவும், மண் சதைகளாவும் எலும்புகளாகவும் இருந்து நம்மை இயக்கிறது .

இந்த ஆன்மாவானது நான்கு வித தோற்றமாக உருவாகி, ஏழு வகை பிறப்பாக பிறந்து, என்பத்து நான்காயிரம் யோனி போதங்களாக பிறந்து, சுக துக்கங்களை அனுபவித்து இறுதில் இறக்கும் இதுவே இயற்கையின் நீதி.

வாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்

1. ஞாயிற்றுக் கிழமை வீடு கட்டினால் நெருப்பினால் பயம்.

2. திங்கட் கிழமை வீடு கட்டினால் மங்களம் உண்டாகும்.

3. செவ்வாய் கிழமை வீடு கட்டினால்  தீயினால் சேதமாகும்.

4. புதன் கிழமை வீடு கட்டினால் செல்வம் கொழிக்கும்.

5. வியாழக் கிழமை வீடு கட்டினால் செல்வம் சேரும்.

6. வெள்ளிக் கிழமை வீடு கட்டினால் செல்வம் பெருகும்.

7. சனிக்கிழமை வீடு கட்டினால் பயம் உண்டாகும்.

எனவே வீடு கட்டுவதற்கு ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகள் தவிர்க்கப்பட் வேண்டிய கிழமைகளாகும்.

கட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்

  • வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
  • கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
  • மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
  • தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
  • மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு… என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல.

ஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து

பொதுவாக இன்றைய சூழ்நிலைகளில் செலவுகளை குறைப்பதற்காகவும், மற்றும் வீட்டிற்கு அழகு ஏற்படுத்துவதற்காவும் ‘’ஆர்ச்’’ வளைவுகள் அமைக்கப்படுகின்றன. இவ்விதம் அமைக்கப்படும் ஆர்ச்சுகள் எந்த அளவுக்கு வீட்டில் வாஸ்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது வீட்டில் அமைக்கப்படும் இடத்தை பொருத்து அதிகமான பாதிப்பு குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

வீட்டின் மெயின் கதவுக்கு நேர் அமைக்கப்பட்டால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்த வீட்டில் பணமூடக்கத்தை ஏற்படுத்தி கெட்ட சக்திகளை நிலைநிறுத்தி அந்த வீட்டில் உள்ள குடும்பத்தலைவரின் வியாபாரம், உத்தியோகம் முதலியவைகளை சீர் குறைக்கின்றது.

வீட்டின் உள் மையப்பகுதியில் இருந்தால் வீட்டுத்தலைவரை நோய்படுக்கையில் படுக்க வைத்து விடுகின்றது.

ஈசான்யத்தில் இருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பும், வடமேற்கில் இருந்தால் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதிப்பும் ஏற்படுகின்றது.

நைருதியில்(தென்மேற்கு) இருந்தால் அந்த வீட்டுத்தலைவரின் மரணத்திற்கு வழி வகுத்து விடுகின்றது.

எனவே நாம் வீடுகட்டும்போது மிகவும் கவனமாக இந்த ஆர்ச் விசயத்தில் ஈடுபட வேண்டும்.

நாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..

வாசலுக்கு எதிரில் சந்து தெரியக் கூடாது.

வாசலுக்கு எதிரில் தெரு இருக்கக் கூடாது.

வாசலுக்கு எதிரில் கோவில்கள் கூடாது.

வாசலுக்கு எதிரில் குப்பைத்தொட்டி இருக்கக் கூடாது

வாசலுக்கு எதிரில் கோபுரம் 90° கூடாது.

மரங்கள் வாசலுக்கு நேரில் கூடாது.

முடிதிருத்தகம் இருக்கக் கூடாது.

குளம் – கிணறு – தொட்டி வாசலுக்கு நேர் கூடாது.

மிருக வதை வாசலுக்கு எதிரில் கூடாது.

வாசலுக்கு எதிரில் மிருகங்கள் படுக்கக் கூடாது.

காரியங்கள் (மரண) நிகழுமிடம் எதிரில் கூடாது.

சாங்கியங்கள் வாசலுக்கு எதிரில் கூடாது.

சாஸ்த்திரம் கூறுவோர் வாசலுக்கு எதிரில் கூடாது.

விதவைகள்  மட்டுமே வசிக்கும் எதில் வீடு கூடாது.

சூலம் – கத்தி – ஆயுதங்கள் வைக்கக் கூடாது.

சுயம்பு  கோவில்கள் வாசலுக்கு நேர் கூடாது.

வாசலுக்கு எதிரில் நெருப்பு கூடாகு.

வாசலுக்கு எதிரில் புகை போக்கி கூடாது.

வாசலுக்கு எதிரில் பாசம் பிடித்த ஈர நிலம் கூடாது.

வாசலுக்கு எதிரில் நோயாளி படுக்கக் கூடாது.

மிருகங்களை காம்பவுண்டுக்குள் அதைக்கக் கூடாது.

வாசலுக்கு எதிரில் யாரும் படுத்துறங்கக் கூடாது.

பெரிய மரங்கள் – அதன் நிழல் வாசலுக்கு எதிரில் கூடாது.

வீதி மூலைக்குத்து வாசல் நேர் எதிர் கூடாது.

வாசலுக்கு எதிரில் வீதி முனை இருக்கக் கூடாது.

வாஸ்து பரிகாரமும் நாய் வளர்ப்பும்

வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே. 

இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் வாஸ்து பரிகாரம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும் எனது அனுபவங்கள் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது தளர்ச்சி கொண்டு முடிவு செய்கிறோம் அல்லவா? அதேபோல் சில வீடுகளில் ஆண் அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக கட்டுக்குள் அடங்கியிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல சிறிய பிரச்சனைகள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது. 

யார் யார் பெண் நாய் வளர்க்கலாம்? 

என்னுடைய வீட்டில் வடக்கும் கிழக்கும் மூடி இருக்கிறது. வடக்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ ஒரு சன்னல் வைக்கக்கூட வழியில்லை என்பவர்கள் ஒரு பெண் நாய்க் குட்டியை எடுத்து வளர்க்கலாம். 

கிழக்குச் சுவர் மூடப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு வடக்கு வாசல் உள்ளது. வடக்கில் திறந்தவெளி உள்ளது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கும் பெண் நாயே ஏற்றது. 

வீட்டு ஆக்கினேய பகுதியில் (தென்கிழக்கு) கிணறு உள்ளது. அதை தற்சமயம் என்னால் மூட முடியாதே என்று வருத்தப்படுகிறவர்களுக்கும் இதே பதில்தான். 

எனக்கு இரண்டே இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அவனது மனைவிக்கு எப்பொழுதும் மருத்துவச் செலவுதான் என்று புலம்புவார்கள் பலர் உண்டு. இவர்களின் வீடுகளில் ஆக்கினேயப் பகுதி துண்டிக்கப்பட்டிருக்கும்.

இது பெண்களின் பகுதி. இப்பகுதி துண்டிக்கப்பட்டதாலலேயே அந்த வீட்டில் மருமகளாக வந்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்படும். இது போன்றவர்களுக்கும் பெண் நாயே சிறந்தது. 

ஆண் நாய்களை யார் வளர்க்கலாம்? 

உங்கள் வீடோ, மனையோ ஆண்கள் பெயரில் இருந்து, ஈசானியம் மற்றும் வாயவியங்கள் திறந்திருந்து பெரிய அளவில் வாஸ்து கோளாறுகள் இல்லாமல் இருந்தாலும் ஆண் நாயை வளர்க்கலாம். 

கிரஹப்பிரவேசம் செய்து புது வீட்டிற்கு செல்லும் முகூர்த்த நாட்கள்

இதுவரை வீடு கட்டுவதற்கான நேரங்களைப் பற்றியும், சாஸ்திர விதிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளேன். இனி இந்த வீட்டிற்கு எப்பொழுது குடி செல்லலாம் கிரஹப்பிரவேசம் செய்யலாம் என்று  இதில் விவரித்துள்ளேன்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய இந்த நான்கு மாதங்களும்  ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளும், பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி, சதுர்த்தி, பெளர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளும் புது இல்லத்திற்கு கிரஹப்பிரவேசம் செய்ய தவிர்க்கப்பட வேண்டியவையாகும் . இரவு நேரம் தவிர்க்கப்பட வேண்டும்.

மகரம் முதல் ஆறு ராசிகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதங்கள் கிரஹப்பிரவேசத்திற்கு சிறந்தவை. இதில் மாசி விலக்க வேண்டும், ஆனி மாதம் விலக்க வேண்டும் என்பதும் ஒரு சிலரின் கருத்து. ஆனால் மாசி மாதம் கிரஹப்பிரவேசம் செய்வது நல்ல பலன்களையே தருகின்றது என்பது என் கூற்றாகும்.

ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி எனும் நட்சத்திரங்கள் கிரஹப்பிரவேசத்திற்கு ஏற்றவை.

புது இல்லத்தில் புகும் போது குரு, சுக்கிர அஸ்தமனம் இருக்கக் கூடாது.

காலை நேரத்தில் வளர்பிறை முகூர்த்தத்தில் கிரஹப்பிரவேசம் செய்வது அனைத்து நலனையும் தரும்.

பலன் தராத தீய மனைகள்

பாறைகள் மேல் கட்டும் மனை

ஏரி – குளங்களுக்குள் கட்டும் மனை

முனைகள் சந்திப்பில் கட்டும் மனை

வடக்கு உயர்ந்த மனை

கடனாம் விற்கப்படும் மனை

தெருக்குத்தில் அமையும் மனை

வீதி தொடராத இடத்து மனை

நீச வாசல் அமையும் மனை

வட்ட – முக்கோண  மனைகள்

கோவில் சொத்துகளின் மனைகள்

பட்டா – சிட்டா –இல்லாத மனைகள்

தோண்டினால் எலும்புகள் கிடைக்கும் மனை

நடுப்பகுதி பள்ளமாக உள்ள மனை

கெட்ட வாடை உள்ள மண் மனைகள்

தண்ணீர் தேங்கும் மனைகள்

சுடுகாடு இடுகாடு இருந்த பூமி மனைகள்

தார்சாலைக்கு தாழ்வாக  உள்ள மனைகள்

கோவில் நிழல் விழும் மனைகள்

வியாதிகள் இருந்த இடத்து மனைகள்

வாழ்ந்து கெட்டவரின் பெயர் மனைகள்

புற்று உள்ள மனைகள்

ஏலத்துக்கு வந்த மனை 

மந்திர தந்திரக்காரர்கள் இருந்து மனை

வில்லங்க சான்றிதழ் சரியில்லாத மனை

மேற்கு பார்த்த மனை சில பிரச்சனைகள் தரும்

நாம் வாங்கும் மனைக்கு உண்டாகும் நற்குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் அந்தணரின் மனையோ(அ) வீடோ இருப்பின் நன்மையே விளையும்.

பசுக்களின் வருகையைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு மனையோ (அ) வீடோ அமைந்திருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையும் செல்வ வளமும் உண்டாகும்.

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்புறத்தில் பூந்தோட்டம், நீர்பாயும் ஒடை முதலியன இருந்தால் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்.

மனைக்குத்து தோஷத்தில் இல்லாத அமைப்புக்கள் வந்தால் நன்மையே விளையும்.

சூரியனையும் சந்திரனையும் எப்போதும் (அந்தந்தக் காலத்தி) பார்ப்பதற்கு ஏற்றவாறு மனையே அல்லது வீடோ அமைந்திருந்தால் மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். அனைத்து விதமான வளங்களுடனும் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.

மனைக் குத்துகளுக்கான பரிகாரம்.

முன்னர்ப் பலவகைக் குத்துக்களால் மனைக்குத் தோஷம் ஏற்படும் என்பதையும் அவைகளால் என்னென்ன கெடுபலன்கள் நடைபெறும் என்பதையும் கண்டோம். இப்படிக் குத்துதோஷம் பெற்ற மனைதான் நமக்குத் கிடைத்தது என்றாலோ அல்லது இப்படிப்பட்ட இடத்தில்தான் வீடுகட்டுவேன் என்று அடம்பிடித்திருந்தாலோ இவற்றிற்கு எல்லாம் பரிகாரமாக ஒரு விதி இருக்கின்றது. அவ்விதிப்படி வீடோ அல்லது மனையோ இருந்தால் எந்தவிதமான குத்து தோஷம் அவற்றிற்கு இல்லை என்றே கொள்ள வேண்டும்.